தே.மு.தி.க.வின் பொருளாளர் பதவியை ஏற்றுக் கொண்ட பின், கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார் பிரேமலதா. அப்போது ’கேப்டன் இனி வரமாட்டார். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்து கட்சியை வளர்ப்பேன்.’ என்று கண்ணீர் மல்கவும், குரலில் கெத்து காட்டி பேசியிருக்கிறார்.
கமல்ஹாசனை ‘இந்து விரோதி’ என்று அடையாளமிட்டு அரசியலில் ஓரங்கட்டிட்டும் முடிவில் இருக்கிறது பி.ஜே.பி. இதற்கான அடிப்படை வேலைகளை துவக்கிவிட்டனர்.
என்னதான் இருபது தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்களை நியமித்துவிட்டாலும் கூட, நிச்சயம் தேர்தலை நடத்தமாட்டார் எடப்பாடியார்! என்று அ.தி.மு.க.வின் உள்ளே இருந்தும் கூட தகவல்கள்வ் வருவதுதான் வேடிக்கை.
சமீப காலமாக தொடர்ந்து தி.மு.க.வை சீண்டிக் கொண்டிருக்கிறார் விஜய். அந்த வகையில், சர்கார் படத்திலும் இதை செய்திருக்கிறாரா? என்று கண்காணிக்க, முதல் நாள் முதல் ஷோவுக்கு புக் செய்து வைத்துள்ளதாம் இணையதள தி.மு.க. அணியின் டீம் ஒன்று.
அப்படி ஏதேனும் இருந்தால் படம் பார்த்துவிட்டு, அதைப் பற்றி எதிர்மறை விமர்சனங்களை வெகுவாக பரப்பிவிடும் மூவ்களிலும் இருக்கிறார்களாம்.
ஓ.பன்னீர்செல்வம், தான் நடத்தி வந்த தர்மயுத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த பிறகு அவரது செல்வாக்கு பாதி சதவீதத்துக்கும் கீழே குறைந்துவிட்டது. இந்நிலையில் பன்னீரின் தம்பி ஓ.ராஜா மீது மணல் கடத்தல், கூலிப்படை அராஜகம் போன்ற புகார்கள் தொடர்வதால் பன்னீர் ரொம்பவே நொந்திருக்கிறார்.
Discussion about this post