2.0 திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 2.0 திரைப்படம் அனைத்து தரப்பினருக்குமானது என்றும் ஷங்கர் மிகவும் நம்பிக்கையான மனிதர் எனவும் கூறினார். உடல்நிலை சரியில்லாதபோது, 2.0 படத்திலிருந்து விலக நினைத்தேன் என்றும் ஆனால் ஷங்கர் விடவில்லை எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம் என தயாரிப்பாளர் தெரிவித்ததாக அவர் கூறினார். இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப்படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார் என்றும் லேட்டா வந்தாலும் படம் வெற்றிபெரும் எனவும் தெரிவித்த ரஜினிகாந்த், தனது நண்பர் கமல் நடிக்க்கும் இந்தியன் 2 மிகப்பெரும் வெற்றி பெரும் என்றார்.
Discussion about this post