தளபதி விஜய்யின் சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் அதிக திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. மேலும், 5 கண்டங்களில் சர்கார் படம் வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகில் முதல் தமிழ் படம் 5 கண்டங்களில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் சர்கார் பட கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள். தியேட்டர்களில் வைக்க விஜய்யின் கட் அவுட்களையும், கொடி தோரணங்கள், பேனர்களும் வைக்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், யாரும் பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று தளபதி விஜய் அறிவுறுத்தி உள்ளார். அந்த பாலை ஏழை குழந்தைகளுக்கு வழங்குங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post