* நடிகர் விஜய்க்கு தெறிக்கும் பாடல்கள் பலவற்றைத் தந்தவர் விஜய் ஆண்டனி. இப்போது அவரே ஹாட் ஹீரோவாகிவிட்டார். இந்நிலையில், அவர் நடித்திருக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் விஜய்யின் ‘சர்கார்’ ரிலீஸாவதால், ஆண்டனியின் நண்பர்கள் அவரிடம் ‘ரிஸ்க் வேண்டாம்’ என்று சொன்னதால், ஒரு வாரம் தள்ளி வைத்துவிட்டாராம்.
இல்லையென்றால், விஜய்யோடு விஜய் ஆண்டனி மோதும் கூத்து களைகட்டியிருக்கும்.
* கோலிவுட்டில் கதை திருட்டு பஞ்சாயத்து ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க இப்போது புதிதாய் இன்னொரு பிரச்னை எகிறியடிக்க துவங்கியுள்ளது. அது ரிலீஸிங் கமிட்டியின் அனுமதியை கண்டுகொள்ளாமல் சிலர் தங்கள் படத்தை வெளியிட துவங்கி உள்ளதுதான்.
ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ மற்றும் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ ஆகியன இந்த லிஸ்டில் முன்னாடி நிற்கின்றனவாம்.
* விநோத் இயக்கத்தில், தல அஜித் நடிக்கும் படத்திற்கு பாலிவுட் ஹீரோயினை எதிர்பார்க்கிறது டீம். தலயின் ஹைட்டுக்கு மிக சரியாக காத்ரீனா கைஃப் பொருந்துவார் என்பது அவர்களின் ஆசை. காத்ரீனாவுக்கும் தமிழ் படமொன்றில் தலைகாட்ட வெகு நாள் ஆசை. அதிலும் தல அஜித், சக்ஸஸ்ஃபுல் விநோத் என்று பக்கா காம்போ இருப்பதால் ஓ.கே. என்று சொல்ல வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
* தமிழ் சினிமாவில் வெகு நாட்களாய் கமல் மகள் ஸ்ருதியை காணோம். அவர் நடித்த படங்கள் அப்படியொன்றும் வெற்றி காட்டவில்லை என்பதால் பல தயாரிப்பாளர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை, கண்டு கொண்ட சிலருக்கும் இவர் ஓ.கே. சொல்லவில்லை. தங்கள் சொந்த கம்பெனியின் தயாரிப்பான ‘சபாஷ் நாயுடு’வில் நடிப்பவர், அதே கம்பெனி தயாரிக்க, விக்ரம் ஹீரோவாக அடவு கட்டும் படத்துக்கு ‘நோ! நோ’ என்று சொல்லிவிட்டார். ஸ்ருதியின் போக்கே புரியலை! என்று நோகிறார் கமல்.
* தமிழில் சில காலத்துக்கு முன் செம்ம கலக்கு கலக்கியவர் லட்சுமி மேனன். ஒரு இடைவெளி விட்டவர் மீண்டும் தனுஷின் படமொன்றின் மூலம் மீண்டும் ஃபீல்டுக்கு வரப்போகிறார்! என்று தகவல் பரவியது. ஆனால் யார் செய்த சூதோ தெரியவில்லை, இப்போது தனுஷின் படத்தில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார் லட்சுமி மேனன்.
Discussion about this post