அஜித்தை பற்றி வரும் அந்த தகவல் மாறலாம்! என்கிறார்கள் கோலிவுட்டில்.
என்னடா அது? என்று கேட்பவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்…அதாவது தொடர்ந்து நான்காவது படமாக சிறுத்தை சிவாவுடன் ‘விஸ்வாசம்’ செய்து கொண்டிருக்கிறார் அஜித். இது தெரிந்த விஷயம்தான். ஷூட் முடிந்துவிட்ட இந்தப் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் பேய்த்தனமாக போய்க் கொண்டிருக்கின்றன.
விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக்! என எதுவுமே அவரது வெறி ரசிகர்களைக் கூட கவரவில்லை. இணையதளத்தில் கமெண்ட்ஸில் கழுவிக் கழுவி ஊற்றுகின்றனர். இது அஜித்தின் காது வரைக்கும் போக அவரே இப்போது படத்தின் பி.பி. வேலைகளில் உட்கார்ந்துவிட்டார். இதனால் இயக்குநர் சிவாவுக்கு பி.பி. எகிறும் கதையை நம் ‘வைரல்’ இணையதளம் ஏற்கனவே சொல்லியிருக்கிறது.
இந்நிலையில் தல-யின் அடுத்த படம் ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பதும், அதன் இயக்குநர் சதுரங்கவேட்டை விநோத் என்பதும் யாவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போகிறார் என்று ஒரு தகவல் தாறுமாறாக பரவிக் கிடந்தது.
ஆனால் லேட்டஸ்ட் தகவலாக, ஒன்று உலவ ஆரம்பித்திருக்கிறது. அதாவது பிங்க் படத்துக்கு, யுவன்சங்கர் ராஜாவை பரிந்துரைக்கிறாராம் அஜித். ரஹ்மானை, விநோத்தின் சொந்த கதையில் தான் நடிக்கப் போகும் அடுத்த படத்துக்கு போட்டுக்கலாம்! என்கிறாராம்.யுவன், அஜித்தும் அருமையான காம்போ என்பது உலகமறிந்த சேதிதான்.
Discussion about this post