கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இனி படம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள், முன்னணி ஹீரோக்கள் முகம் சுளிப்பார்கள்! என்று கோலிவுட் யோசித்தது. ஆனால் நடப்பது என்னவோ தலைகீழாய் இருக்கிறது.ஆம், முருகதாஸின் அடுத்த படம் ரஜினிகாந்தோடு! என்கிறார்கள்.
பட்டையை கிளப்பும் பொலிடிக்கல் கதை ஒன்றை ரஜினியிடம் முருகதாஸ் சொன்னாராம்.
சூப்பரும் அதைக்கேட்டு ‘ஹ்ஹே! சூப்பருல்ல’ என்றாராம். தயாரிப்பாளர் யார்? என்பது உள்ளிட்ட மற்ற அனைத்து விஷயங்களும் சைலண்டாக அலசப்பட்டு வருகின்றன. தீபாவளிக்கு ‘பேட்ட’ படத்தின் ஸ்பெஷல் லுக் ஒன்றை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அதன் பிறகு இந்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம்! என்று தகவல்.
இதற்கிடையில், ‘முருகதாஸிடம் அந்தக் கேள்வியை கேட்டாரா ரஜினி?’என்று கோடம்பாக்கத்தினுள் ஏக கிசுகிசு பேச்சு. அது என்ன கேள்வி? என்கிறீர்களா! வேறொன்றுமில்லை ‘இந்தக் கதை உங்க கதைதானா?’ என்பதைத்தான்.
ஆனால் இதற்கு கிடைத்த பதில் என்ன தெரியுமா?…’ரஜினி அப்படி எந்தக் கேள்வியையும் கேட்கவில்லையாம்.’
ஹூம்! நேர்மை, உண்மை, கடமை-ங்கிற சீன்களெல்லாம் ரசிகர் மன்ற ஆளுங்களுக்கும், மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும்தான் போல.
Discussion about this post