நகைச்சுவை நடிகர் யோகி பாபு எமனாக வேடம் ஏற்று நடிக்கும் படம் ‘தர்மபிரபு’. முத்துகுமரன் இயக்குகிறார்; பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். இதுகுறித்து படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில் புதிய எமனை தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது. யோகிபாபுவும், கருணாகரணும் போட்டியிடுகிறார்கள்.
இதில் யார் வெற்றி பெற்றார்கள், அதற்காக அவர்கள் தங்கள் தகுதியை எப்படி நிரூபிக்கிறார்கள் என்பதே கதை. எமன் வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்துக்காக சினிமா ஸ்டுடியோவில் எமலோக செட் அமைக்கப்படுகிறது. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு. ஜஸ்டின் பிரபாகரன் இசை. இவ்வாறு இயக்குனர் முத்துகுமரன் கூறினார்.
Discussion about this post