நடிகை ஹன்சிகா புதிய தெம்புடன் கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். தனது உடல் தோற்றத்தை ஸ்லிம்மாக மாற்றியிருக்கிறார். ஆனால் முகதோற்றத்தில் மாற்றம் இல்லாமல் அதே அழகுடன் திகழ்கிறார். தமிழில் துப்பாக்கி முனை, 100, மஹா ஆகிய படங்களில் நடிக்கிறார். கவர்ச்சி ஹீரோயினாக நடித்து வந்த ஹன்சிகா அதற்கு குட்பை சொல்லிவிட்டு இனிமேல் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிக்க உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
கடந்த 1 ஆண்டில் 18க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டேன். அவற்றில் 4 படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டேன். கிளாமர் ஹீரோயினாக அல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள ஹீரோயின் சப்ஜெக்ட்டில் அதிக கவனம் செலுத்தி நடிக்க உள்ளேன். எனது திருமணம் பற்றி கேட்கிறார்கள். அந்த முடிவை எனது அம்மாவிடம் விட்டுவிட்டேன். அதில் அவர் அக்கறை எடுத்துக்கொள்வார். என் அம்மா பார்க்கும் மாப்பிள்ளையை கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
Discussion about this post