தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அங்காடி தெரு அஞ்சலி. சராசரி உடற்தோற்றத்துடன் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல் எடை கூடி குண்டு தோற்றத்துக்கு மாறினார். பின்னர் கடுமையான உடற்பயிற்சி செய்து ஒல்லியானார். தற்போது தமிழில் பேரன்பு, காண்பது பொய், நாடோடிகள் 2ம்பாகம் உள்பட 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். கடந்த 1ம் தேதியன்று தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய புதிய ஸ்டில் வெளியிட்டிருந்தார் அஞ்சலி. அதை கண்டு யாராலும் அவர் அஞ்சலி என்பதை நம்ப மறுத்தனர்.
முற்றிலுமாக உடற்தோற்றம் முதல் முகதோற்றம்வரை எல்லாமே மாறியிருந்தது. பாலிவுட் நடிகைபோல் ஸ்லிம்மாக மார்டன் உடையில் அவர் அதில் தோன்றினார். ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையுலகினரும் அவரது திடீர் மாற்றத்தை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடுமையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் இந்த தோற்றத்துக்கு அஞ்சலி மாறியிருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் அவர் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கலாம் என பலர் கூறுகின்றனர்.
Discussion about this post