ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் படத்தில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்தக் கூட்டணி அப்போது அமையாமல் போனது. அதனால் த்ரிஷா, அஞ்சலி அந்த படத்தில் இணைந்து நடித்தனர். தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து ஜெயம் ரவி, காஜல் அகர்வால் கூட்டணி உறுதியாகி படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
‘அப்பா லாக்’ (App(a) Lock) என்ற குறும்படம் மூலம் பரவலான கவனம் பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் இணைந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் 20ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
அடங்க மறு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அதன் வெளியீட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. காவல்துறை அதிகாரியாக அந்த படத்தில் நடித்திருந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் படத்திற்காக தனது உடல் எடையை ஜெயம் ரவி குறைத்துள்ளார். இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நவம்பர் 8ஆம் தேதி தொடங்க உள்ளது.
Discussion about this post