ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.o திரைப்படம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் ட்ரெய்லர் வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றுவருகிறது.
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட படக்குழ்வினர் கலந்துகொண்டுள்ளனர். படத்தின் ட்ரெய்லர் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. விழாவில் அக்ஷய் குமார், ‘வணக்கம் சென்னை, மகிழ்ச்சி’ என தமிழில் பேசியது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
“அறிவியலின் ஐந்தாவது விசையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 3.o படத்திற்கான கரு உள்ளது. வாய்ப்பு அமைந்தால் அந்த படம் உருவாகும். இது போன்ற படங்களை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும். அப்போது தான் இந்தியாவிலும் இத்தகைய படங்கள் அதிகளவில் வெளியாகும்” என்று ஷங்கர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
“நான் அமைத்த ட்யூன் ஷங்கருக்கு பிடித்திருந்தது. இந்த பாடல் வீடியோவை பார்த்தபோது நான் திகைத்து போனேன். ஷங்கர், ஷங்கர் தான்” என்று கூறியுள்ளார்.
Discussion about this post