பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். நடன இயக்குநரான காயத்ரி ரகுராம், பிக் பாஸ் சீசன் 1இல் பங்கேற்று சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து நடன இயக்குநராக பணியாற்றி வந்த இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
https://twitter.com/gayathriraguram/status/1058540533100961792
இதற்கு காரணம் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்ட காயத்ரி கடந்த 2009 ஆம் ஆண்டே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தன்னுடைய அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். இரண்டாவதாகவும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் எப்படி காயத்ரி கர்ப்பமானார் என அனைவரும் குழம்பி போய் இருந்தனர். இந்நிலையில் இதற்குப் புள்ளி வைக்கும் விதத்தில் தற்போது கர்ப்பத்திற்கு காரணம் என்ன என்பதை ஒரு புகைப்படத்தின் மூலம் விளக்கி உள்ளார் காயத்ரி. அதில் நடிகர் ஹரிஷ் உத்தமனுடன் நடிக்கும் புதிய படத்தின் கதாபாத்திரம் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post