மகேந்திரசிங் தோனி இல்லாத வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இளம் வீரர் ரிஷப் பண்டுக்கு, ரோகித் சர்மா அறிவுரை கூறியுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுகிழமை தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. இந்த தொடரில் மகேந்திரசிங் தோனி, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ரோகித் சர்மா, இளம் வீரர் ரிஷப் பண்ட் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார் என்று நினைப்பதாகத் தெரிவித்தார். தோனி இல்லாதது அணியின் நடுவரிசைக்கு இழப்பு தான் என்ற போதிலும் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்டுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
Discussion about this post