ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் காம்போவில் உருவாகும் சர்கார் படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார்.
ஓம்எம்ஜி பொண்ணு எனும் டெக்கி வரிகளைக் கொண்ட டூயட் பாடல், ‘ஒருவிரல் புரட்சியே’ எனும் படக் கதைக் கருவைப் பேசும் வரிகளைக் கொண்ட பாடல், விஜய்யின் கதாபாத்திரத்தை விளக்கும்படி வரிகள் அமைந்த‘சிஇஓ இன் தி ஹவுஸ்’ எனும் பாடல் போன்றவற்றுடன் ‘சிம்டாங்காரன்’ எனத் தொடங்கும் பாடலும் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ளது. சிம்டாங்காரன் என்றால் என்ன என்பதற்கு ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்த நிலையில், பாடலின் பிற வரிகளுக்கும் தற்போது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் விவேக்.
ரஜினிகாந்தின் 2.O பட ட்ரெய்லர் இன்று மதியம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (நவம்பர் 2) இந்தப் பாடலுக்கான விளக்கத்தை விவேக் தெரிவித்திருந்ததால் இணையத்தில் 2.O படத்துடன் சேர்த்து தற்போது சர்காரும் ஒரே நேரத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இணையத்தில் இப்படி என்றால் களத்திலோ இன்னொரு விஷயம் நடைபெற்றுள்ளது.
அதாவது ரஜினிகாந்தின் 2.O ட்ரெய்லரை முன்னிட்டு பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதைப் போலவே ‘விரைவில் விஜய்யின் சர்கார் ’எனவும் ‘ஒருவிரல் புரட்சி ஆரம்பம்’ எனவும் விஜய்யின் போஸ்டர்களும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. படம் வெளியானால் போஸ்டர்கள் ஒட்டப்படுவது வழக்கம்தான். ஆனால் இந்த போஸ்டர்கள் பட விளம்பரப் போஸ்டர்களாகக் காட்சியளிக்காமல் விஜய்யின் அரசியல் என்ட்ரியைக் குறிப்பிடும் விதமாக அமைந்துள்ளதாகவே பலரும் கூறிவருகின்றனர்.
விஜய்யின் சர்கார் படத்தின் டீசர் வெளியானபோது அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தான் நடிக்கும் பேட்ட படத்தின் அப்டேட்டை ரஜினிகாந்த் வெளியிட்டு சர்காருடன் பேட்டயையும் பேசுபொருளாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post