ரஜினி நடித்த மோஷன் கேப்சர் படமான ‘கோச்சடையான்’ படத்தில் ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன். பெங்களூரை சேர்ந்த இவர் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவருக்கும் இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர். இந்தியில் ‘பத்மாவத்’ உள்ளிட்ட மேலும் சில படங்களில் இவர்கள் ஜோடி சேர்ந்து நடித்தனர். கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி தங்களது திருமண தேதியை இந்தி, ஆங்கிலத்தில் அறிவித்தனர். அதன்படி இம்மாதம் 14, 15ம் தேதி இத்தாலியில் தீபிகா, ரன்வீர் சிங் திருமணம் நடக்கிறது. தென்னிந்திய கன்னடிக இந்து வைஷ்ணவ முறைப்படி 14ம் தேதியும், வட இந்திய சீக்கிய மத முறைப்படி 15ம் தேதியுமாக இருமுறை திருமண விழா நடக்கிறது.
இதற்காக படப்பிடிப்பு பணிகளிலிருந்து தீபிகா படுகோன் 1மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார். பெங்களூரில் உள்ள வீட்டில் தீபிகாவின் திருமண கொண்டாட்டம் சிறப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. பளிச்சிடும் ஆரஞ்ச் நிற உடை அணிந்து பிரத்யேக மேக்அப் அணிந்திருந்தார். அவரது புகைப்படத்தை தீபிகாவின் தோழியும் ஸ்டைலிஸ்ட்டுமான ஷெலீனா நதானி தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இத்தாலியில் நடக்கும் தீபிகா, ரன்வீர் திருமண விழாவில் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்ள உள்ளனர். அதன்பிறகு மும்பை மற்றும் பெங்களூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
Discussion about this post