நான் உடலை கோவிலாக நினைப்பதால் தான் என்னடைய உடல் ஃபிட்னஸை மெயின்டைன் பண்ண முடிகிறது என ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலக பிரபலங்கள் வீடியோ வாயிலாக ‘2.0’ படக்குழுவினருக்கு கேள்வி எழுப்பினார்கள். அதற்கு படக்குழுவினரும் பதிலளித்தார்கள்.
இதில் அக்ஷய் குமாரின் ஃபிட்னஸ் குறித்து விஷால் கேள்வி எழுப்பினார். ”உங்களின் ஃபிட்னெஸ் பத்தி படிச்சு வியந்திருக்கேன். உங்க ஃபிட்னெஸை எப்படி மெயின்டெயின் பண்றீங்க?” எனக் கேட்டார். அதற்கு அக்ஷய் குமார் பதிலளித்ததாவது:
நான் ஜிம் வெச்சிருக்கேன். 4 மணிக்கு எழுந்துவிடுவேன். என் வாழ்வில் இதுவரை ஒருநாள் கூட நான் சூரிய உதயத்தைப் பார்க்காமல் இருந்ததில்லை. என் அப்பா ஆர்மியில் இருந்ததுனால் அது எனக்கு பழக்கமாகிடுச்சு. என்னை யாருமே இதற்கெல்லாம் கட்டாயப் படுத்தியதில்லை. எனக்கு இது பிடிச்சிருக்கு. நான் என் உடலை கோவில் என்று நினைக்கிறேன். அதுதான் காரணம் என்றார்.
Discussion about this post