ஷங்கர் என்ற அறிவு ஜீவியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் என 2.0 பட வெளியீட்டு விழாவில் நடிகர் அக்சய் குமார் பேசியுள்ளார்.
‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் ‘2.0’ படம் குறித்து அக்ஷய்குமார் பேசியதாவது:
’2.0’ படம் ஒரு பாடம். இப படத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஷங்கர் என்ற அறிவுஜீவியிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஷங்கர் இயக்குநர் மட்டுமல்ல அவர் ஒரு விஞ்ஞானி. இந்தப் படத்துக்கு நான் மேக் அப் போட்டதுபோல் எந்தப் படத்துக்கும் நான் மேக் அப் போட்டதில்லை. என் ஆயுளுக்கான மேக்கப்பை இந்த ஒரே படத்துக்கு போட்டுவிட்டேன். மேக் அப் போட 3 மணி நேரம் ஆகும். மேக் அப் கலைக்க 1.5 மணி நேரம் ஆகும். ஆனால் எல்லா வலிக்கும் இந்தப் படம் பொருததமானது. அத்தனை வலிக்கும் பதில் இருக்கிறது.
இவ்வாறு அக்ஷய்குமார் பேசினார்.
Discussion about this post