கடந்த ஆண்டு பெங்களூர் நட்சத்திர ஓட்டலில் நடக்கவிருந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். அதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆபாச நடிகையான சன்னி லியோன் புத்தாண்டு தினத்தில் கர்நாடகாவில் நடனம் ஆட வரக்கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் நடந்த கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்றார். அதற்காக கேரளா வந்த அவரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அதைக்கண்டு பூரிப்படைந்த சன்னி, தன்னை வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் கூடிய விரைவில் மலையாள படத்தில் கதாநாயகியாக நடிப்பேன் என தெரிவித்தார்.
சன்னி லியோன் தற்போது மலையாளத்தில் ரங்கீலா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதுபற்றி அவர் டுவிட்டரில் கூறும்போது,’மலையாளத்தில் எனது முதல்படமான ரங்கீலா பற்றி அறிவிப்பதில் பரவசம் அடைகிறேன். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தை சந்தோஷ் நாயர் இயக்கி உள்ளார்’ என கூறி உள்ளார். தமிழில் வட கறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிய சன்னி தற்போது வீரமாதேவி படத்தில் கதாநாயகியாக நடிப்பதுடன் மலையாள திரையுலகிலும் ஹீரோயினாக அறிமுகமாவது தென்னிந்திய நடிகைகள் ஒரு சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post