நடிகை ஜோதிகா நடித்திருக்கும் புதிய படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கி உள்ளார். இப்படம் இந்தியில் வித்யாபாலன் நடித்த ‘தும்ஹாரி சலு’ படத்தின் ரீமேக். தனஞ்செயன் தயாரிக்கிறார். ஏ.எச்.காஷிப் இசை அமைக்கிறார். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜோதிகா கூறும்போது,’ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். ரீமேக் படங்களை ஏற்று நடிக்கும்போது அந்த படத்தை நான் பார்க்க மாட்டேன். அப்படி பார்த்தால் குறிப்பிட்ட காட்சியில் அதுபோலவே நடிக்க தோன்றும். அதை தவிர்க்கவே இப்படி செய்வேன்.
காட்சியின் போது எந்த சூழல், என்ன பாவனை காட்டவேண்டும் என்பதை இயக்குனர் ராதா மோகன் விளக்கும்போது அதை உள்வாங்கி எனது பாணியில் நடித்துள்ளேன். இப்படத்தின் ஒரிஜினலுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ராதாமோகன் இயக்கத்தில் மொழி படத்தில் 10 வருடத்துக்கு முன் நடித்தேன். 10 வருட இடை வெளிக்கு பிறகு அவருடன் மீண்டும் பணியாற்றும்போதும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அப்படத்தில் நடித்த முதல்காட்சி போலவே இப்படத்திலும் முதல் காட்சி நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது’ என்றார்.
Discussion about this post