இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த சில படங்களின் தமிழ் ரீமேக்கில் ஏற்கனவே ரஜினி தமிழில் நடித்திருக்கிறார். அதேபோல் மலையாளத்தில் மோகன்லால் நடித்து திரைக்கு வந்த படம் ‘த்ரிஷ்யம்’ . தமிழில் இப்படம், ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. மோகன்லால் நடித்த வேடத்தில் கமல் நடித்தார். முன்னதாக இப்படத்தில் நடிக்க ரஜினிக்கு தான் அழைப்பு சென்றது. மலையாளம், தமிழ் இருமொழியில் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் அளித்த ஒரு பேட்டியில் த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்க மறுத்தது பற்றி விளக்கினார்.
அவர் கூறும்போது,’முதலில் ரஜினியிடம் தான் இக்கதை கூறப்பட்டது. கதை அவருக்கு பிடித்திருந்தது. மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தை ஏற்க கேட்டபோது மறுத்துவிட்டார். குறிப்பிட்ட ஹீரோ பாத்திரம் போலீசில் அடிவாங்குவது போல் காட்சி அமைக்கப்பட்டிருப்பதை எனது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என கூறி அதை ஏற்க மறுத்துவிட்டார். இதை சொல்வதற்கு காரணம் நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு நடிகருக்கு நடிப்பை வெளிப்படுத்துவது என்பது எவ்வளவு வரையறுக்கட்பட்டதாக இருக்கிறது என்பதை உணர்த்தத்தான்’ என்றார்.
Discussion about this post