நேபாளி, 6 மெழுகுவர்த்திகள், தொட்டி ஜெயா போன்ற படங்களை இயக்கியவர் வி.இசட்.துரை. தற்போது இருட்டு என்ற பெயரில் பேய் படம் இயக்குகிறார். இப்படம்பற்றி இயக்குனர் கூறியதாவது: திகில் படம் என்றால் எனக்கு பயம். ஆகையால் இதுவரை ஒரு பேய் படம் கூட பார்த்தது கிடையாது. சுந்தர்.சியை ஹீரோவாக வைத்து படம் இயக்க கேட்டபோது நீங்கள் திகில் படம் செய்யுங்கள் என்றார். அதைக்கேட்டவுடன் திகில் ஆகிவிட்டேன். அதைக்கண்ட அவர், உங்களுக்கு திறமை இருக்கிறது. திகில் படம் இயக்கினால் வெற்றி பெறும் என்று ஊக்கப்படுத்தினார். அவர் தந்த ஊக்கத்தினால் இருட்டு படம் இயக்க சம்மதித்தேன். அதன்பிறகு பல நாடு, பல மொழிகளில் வந்த பேய் படங்கள் நிறைய பார்த்தேன்.
அனைத்துமே மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில்தான் எடுக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து சற்று வித்தியாசமாக இப்படத்தை இயக்க எண்ணினேன். இப்படத்தின் கரு எல்லோர் வாழ்விலும் ஒன்றிப்போகும் விதமாகவே இருக்கும். காவல் துறை அதிகாரியாக சுந்தர்.சி நடிக்கிறார். அவரது மனைவியாக சாக்ஷி பர்விந்தர் நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் தன்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, விடிவி.கணேஷ் நடிக்கின்றனர். இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு. கிரிஷ் இசை. ஊட்டி, சூரத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இவ்வாறு வி.இசட். துரை கூறினார்.
Discussion about this post