டான் பிராட்மேனின் சாதனையைத் தவிர மற்ற அனைத்துச் சாதனைகளையும் விராட் கோஹ்லி முறியடிப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாக் கருத்துத் தெரிவித்தார். திறமை, ஆர்வம், துடிப்பு அனைத்தும் உள்ளவர் விராட் கோஹ்லி என்றும் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனின் சாதனையைத் தவிர ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, இருபது ஓவர் போட்டி என அனைத்து வகைகளிலும் எல்லாச் சாதனைகளையும் கோஹ்லி முறியடிப்பார் எனத் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டியில் சராசரியாக 99.9 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post