இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பதி ராயுடு முதல்தர போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் ஒருநாள், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார். இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரர் அம்பதி ராயுடு(33). ஐதராபாத் அணியின் கேப்டனான இவர், முதல்தர கிரிக்கெட்டில் 97 போட்டிகளில் விளையாடி 6151 ரன்கள் குவித்துள்ளார். இதில் 16 சதங்கள் அடித்துள்ளார். 45 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்பதி ராயுடு 1,447 ரன்கள் எடுத்துள்ளார். இதில், இவருடைய சராசரி 51.67 ஆகும்.
இந்நிலையில், முதல்தர கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரஞ்சி டிராபி போன்ற முதல்தர போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள அம்பதி ராயுடு ஒருநாள், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் 4ம் நிலை ஆட்டக்காரர் என்பதால், உலகக்கோப்பை போட்டிகளில் பொறுப்புடன் ஆட வேண்டியுள்ளதால் அம்பதி ராயுடு இந்த முடிவை எடுத்துள்ளார்.
Discussion about this post