தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நாடு முழுக்க ரசிகர்கள் இருப்பது பலரும் அறிந்ததே. அதே வேளையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் பிரபல நடிகர் ஷாருக்கான்.
நேற்று 2.0 படத்தில் ட்ரைலர் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் 24 மணி நேரத்தில் 77 லட்சம், 35 லட்சம், 1 கோடி பார்வைகளை தான் பெற்றுள்ளது.
ஆனால் அண்மையில் வெளியான ஷாருக்கான் நடித்துள்ள ஜீரோ படத்தின் ட்ரைலர் 24 மணிநேரத்தில் 6 கோடி பார்வைகளை பெற்று ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்துள்ளது. இது பலருக்கும் ஷாக் தான்.
இத்தனைக்கும் 2.0 படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். ஹிந்தியில் மட்டும் எடுத்துக்கொண்டால் கூட ஜீரோ படத்தின் சாதனை 2.0 முந்தவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
Discussion about this post