பிரபல சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 43. இவர் மெட்டி ஒலி, கோலங்கள், நாதஸ்வரம் போன்ற நடகங்களில் பிரபலமானவர்.
இவர் நடித்த சில நாடகங்களிலேயே பலரின் மனம் கவர்ந்தவர். அதற்கு இவரின் யதார்த்த நடிப்பே காரணம்.
அவர் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் வெற்றி படமான எம்டன் மகன் படத்தில் நடித்து அசத்தினார். இவர் இடம்பெற்றுள்ள வராரு வராரு என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது.
தீபாவளி பண்டிகையையொட்டி தனது சொந்த ஊரான பழனிக்கு நேற்று சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று நள்ளிரவு தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் கொண்டு சொல்லும் வழியிலே விஜயராஜின் உயிர் பிரிந்தது. இதையடுத்து, இவரின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவரின் மரணம் சின்னத் திரை பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post