இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி ஒன்றில் தனது 25 வயது வரை தற்கொலை எண்ணம் தன்னை வாட்டி வதைத்ததாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டை ஒட்டி ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், “என் 25 வயது வரை தற்கொலை எண்ணம் எனக்குள் இருந்தது. அடிக்கடி பலரும் தன்னிடம் சிறப்பாக ஏதும் இல்லை என்று நினைக்கிறோம். என் தந்தையை இழந்ததால் நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.
“என் தந்தை இறந்துவிட்டதால், நான் அதிக திரைப்படங்களில் வேலை செய்வதைத் தவிர்த்தேன். எனக்கு 35 திரைப்படங்கள் கிடைத்தன. நான் இரண்டை மட்டுமே தேர்வு செய்தேன்.” என்று கூறினார்.
“இது ஒரு விதத்தில் எனக்கு தைரியத்தை ஏற்படுத்தியது. மரணம் அனைவருக்கும் உறுதியானது. எல்லாவற்றுக்கும் முடிவு காலம் இருக்கும்போது எதற்காக பயப்பட வேண்டும்? கடினமான சூழ்நிலைகள் தைரியத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளன.” என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post