உதயா தயாரித்து நடித்துள்ள படம், உத்தரவு மகாராஜா. ஆஷிப் குரேசி இயக்கியுள்ளார். வரும் 16ம் தேதி இப்படம் ரிலீசாகிறது. படம் குறித்து உதயா கூறியதாவது: என் தந்தை, தயாரிப்பாளர். தம்பி ஏ.எல்.விஜய், இயக்குனர். அவர்கள் துணையின்றி தனியாக ஜெயிக்க கடுமையாக போராடி வருகிறேன். பேன்டசி கலந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் படம், உத்தரவு மகாராஜா.
என்னை நம்பி பெரிய பட்ஜெட்டுக்கு யாரும் வர மாட்டார்கள் என்பதால், நானே தயாரிப்பாளராகி விட்டேன். என் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி இருக்கிறேன் என்றாலும், பிரபுதான் படத்தின் ஹீரோ. முழு படத்தையும் அவர்தான் தாங்கிப் பிடிக்கிறார். ஸ்ரீமன், கோவை சரளா, மனோபாலா உள்பட தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிககள் பலர் எனக்காக நடித்துள்ளனர்.
Discussion about this post