வடசென்னை படத்துக்கு பிறகு மீண்டும் தனுஷ் நடிப்பில் ஒரு படம் இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். அதற்கு பிறகே வடசென்னை படத்தின் 2ம் பாகத்தை அவர் இயக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கிடையே வடசென்னை படத்தில் வந்த அமீரின் கேரக்டரை வைத்து ஒரு கதையை அவர் உருவாக்கியுள்ளாராம்.
இதை வெப்சீரிஸாக இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இந்த வெப்சீரிஸில் வடசென்னையில் சிறு வயது முதல் வளர்ந்து தாதா ஆகும் வரையிலான அமீரின் கேரக்டரை பற்றி காட்ட உள்ளாராம். இதனால் இதற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Discussion about this post