தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்ற சரித்திர படத்தில், முதல்முறையாக அமிதாப்பச்சன், ஆமிர்கான் இணைந்து நடித்துள்ளனர். குதாபக்ஷ் ஆஸாத் என்ற போர் வீரர்களின் தலைவனாக அமிதாப், ஃபிரங்கி என்ற எதிர் படை வீரராக அமீர்கான், சுரையா என்ற நடன மங்கையாக கேத்ரினா கைஃப், ஸபிரா என்ற மிரட்டும் மங்கையாக ஃபாத்திமா சானா ஷேக் நடித்துள்ளனர். இதில் நடித்தது குறித்து அமிதாப்பச்சன் கூறுகையில், ‘அமீர்கான் ஒரு கதாசிரியர், இயக்குனர், உதவி இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர் மற்றும் ஒரு முழுமையான கலைஞர்.
மேலும், அவர் ஒரு மிகச் சிறந்த மனிதநேய பண்பாளர். சில தருணங்களில் அவருடன் சேர்ந்து நடித்தது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. அதை நான் ரசித்து உணர்ந்து நடித்தேன்’ என்றார்.அமீர்கான் கூறும்போது, ‘அமிதாப் என்ற ஜாம்பவானுடன் இணைந்து நடித்த பிறகே என் பல வருட திரைக்கனவு நனவானது. நான் சினிமாவுக்கு வந்து 30 வருடங்களாகி விட்டது. அமிதாப்புடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்’ என்றார்.தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படம், வரும் 8ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாகிறது.
Discussion about this post