கிரிஷ் படத்தின் 3 பாகங்களில் நடித்து முடித்துவிட்டார் ஹிரித்திக் ரோஷன். 3 படங்களுமே பெரிய வெற்றி பெற்றன. இந்த 3 பாகங்களையும் தயாரித்து, இயக்கியவர் இவரது தந்தை ராகேஷ் ரோஷன். இப்போது கிரிஷ் 4 படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ராகேஷ் ரோஷன் முடித்துள்ளார். அடுத்த ஆண்டில் படப்பிடிப்பை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக லொகேஷன்கள் தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
கிரிஷ் சீரிஸின் முதல் பாகமான கோயி மில்கயா படத்தில் ஜாது என்ற ஏலியன் கேரக்டர் பிரபலமானது. அந்த கேரக்டரை மீண்டும் பார்ட் 4ல் கொண்டு வர ராகேஷ் ரோஷன் முடிவு செய்திருக்கிறார். கதையில் அந்த கேரக்டருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். இது குறித்து ஹிரித்திக் கூறும்போது, ‘கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டேன். கிரிஷ் படத்தின் நான்காவது பாகத்துக்கு நான் தயாராகிவிட்டேன்’ என்றார்.
Discussion about this post