என்னதான் அ.தி.மு.க. மீது கொலை வெறி கோபத்தில் இருந்தாலும் கூட அவ்வப்போது தி.மு.க.வை சீண்டாவிட்டால் பி.ஜே.பி. தலைகளுக்கு தூக்கம் வராது. அந்த வகையில் சும்மா இருக்கும் ஸ்டாலினை வார்த்தை தூண்டிலை போட்டு வம்புக்கு இழுத்திருக்கிறார் ஹெச்.ராஜா.
பி.ஜே.பி.யின் தேசிய செயலாளரான அவர் சமீபத்தில் அ.தி.மு.க.வை இன்ச் பை இன்ச் ஆக ஒரு பேட்டியில் கிழி கிழியென கிழித்து தோரணம் கட்டியிருக்கும் அதே நேரத்தில், போகிற போக்கில் ஸ்டாலினையும் திட்டியிருக்கிறார் இப்படி…
“மக்களுக்கோ, கட்சித் தொண்டர்களுக்கோ உற்சாகம் அளிக்கவே முடியாத தலைவர்தான் ஸ்டாலின். இதை நான் இப்போ சொல்லலை, ரொம்ப நாளாகவே வருஷமாவே சொல்லிண்டிருக்கேன்.
இந்த நிலையில அடுத்து அவர்தான் தமிழக முதல்வர்ன்னு சர்வேக்கள் சொல்றது நகைப்புக்கு உரியதா இருக்குது. மேலும் இப்போ வரப்போறது நாடாளுமன்ற எலெக்ஷன் தானே தவிர சட்டசபை எலெக்ஷனில்லை.
இந்த மாதிரி எத்தனையோ சர்வேக்களை நாங்க பார்த்துட்டோம்.உத்திரபிரதேசத்துல எங்களை ரொம்ப குறைவா மதிப்பிட்டு சர்வே வெளியிட்டாங்க, ஆனா நிலைமை என்னாச்சு? யோகி ஜம்முன்னு வந்து உட்கார்ந்தாரில்லையா? அது மாதிரிதான் இங்கேயும் நடக்கும்.” என்றிருக்கிறார்.
என்னா வில்லத்தனம்!?
Discussion about this post