அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுள் இவ்வளவு சீக்கிரமாக புகைச்சல், விரிசல் உருவாகுமென்று எடப்பாடியார் கூட நினைத்திருக்கமாட்டார். தலைவருக்கும், தளபதிக்கும் இடையில் செமத்தியாக மூண்டிருக்கிறது உரசல் பஞ்சாயத்து.
விவகாரம் இதுதான்…
அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்செல்வன். இவருக்கும் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளரான தினகரனுக்கும் இடையில் கடும் உரசல் உருவாகியிருக்கிறது என்கிறார்கள். காரணம், அரசியல் ரீதியாக தங்கம் சொல்லும் எந்த யோசனைகளையும், முடிவுகளையும் காது கொடுத்து கேட்பதில்லையாம் தினகரன். பின் அவரே அந்த முடிவுக்கு வந்துவிட்டு, ஏதோ தானே அதை யோசித்தது போல் அறிவிக்கிறாராம்.
குறிப்பாக, பதினெட்டு எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் உறுதியான நிலையில், மேல்முறையீடு செய்ய வேண்டாமென்று தங்கம் சொன்னாராம் தினகரனிடம். ஆனால் இதை முதலில் மறுத்த அவர் தங்கத்தை விட்டே ‘மேல்முறையீடு செய்கிறோம்’ என்று மீடியாவிடம் சொல்ல சொன்னாராம்.
ஆனால் பிறகு சில நாட்கள் கழித்து, மேல்முறையீடு செய்யப்போவதில்லை எனும் முடிவை தினகரனே அறிவித்தாராம். இந்த நிலையில் மீடியாவிடம் தான் அவமானப்பட்டு விட்டதாக நினைக்கும் தங்கம், ‘மாற்றி மாற்றி பேசுறார், கண்டபடி கடுப்பேத்துறார்’ என்று தங்கம் மீது தாளாத கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.
இதைத்தானே எதிர்பார்த்தீர்கள் எடப்பாடியாரே!
Discussion about this post