நடிகர்களுக்கு சமமாக நடிகைகளும் தங்களது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அத்தகைய படங்கள் வசூல் சாதனைகளும் நிகழ்த்தி உள்ளன. இதனால் கதாநாயகிகளை மையமாக வைத்து கதைகளை இயக்குநர்கள் உருவாக்கி வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது ராய் லட்சுமியும் இணைந்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த வினோ வெங்கடேஷ் இயக்கும் திகில் படத்தில் ராய் லட்சுமிக்கு முன்னணி கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. திகில் படமாக உருவாகும் இந்த படத்திற்கு சின்ட்ரல்லா என்று தலைப்பு வைத்துள்ளனர்.
She’s does it with style #CINDRELLA #CinderellaFirstLook don’t mess with her 😉😋 #poster #mynexttamil 💖 horror fantasy coming soon 👹 enjoy… director @vinoovenketesh
Produced by : SSI_Production pic.twitter.com/t9BiBCh4AN— RAAI LAXMI (@iamlakshmirai) November 4, 2018
இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: சின்ட்ரெல்லா திகில் கதையம்சம் உள்ள படம். ராய் லட்சுமி பேயாகவும், இசைக்கலைஞராகவும் இருவேடங்களில் வருகிறார். ஏற்கனவே 8 கதைகளை கேட்டு அவற்றில் நடிக்கும் யோசனையில் இருந்த ராய் லட்சுமிடம் சின்ட்ரல்லா கதையை சொன்னதுமே மற்ற படங்களை தவிர்த்து விட்டு இதில் நடிக்க வந்துவிட்டார். படத்தின் ஒரு பகுதியில் குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்களும், இன்னொரு பகுதி பயமுறுத்துவதாகவும் இருக்கும். பேய் வேடத்துக்கு ராய் லட்சுமி 4 மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம் என்றார்.
Discussion about this post