ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘எந்திரன்’ படத்தின் சீக்வெல் ஆன ‘2.0’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரதானமாக கலந்து கொண்டார் அக்ஷய் குமார். ஓவர் சீன் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனிதர் மேன் ஆப் தி சிம்பிளிசிட்டியாய் கலக்கிவிட்டார்.
’இந்த படத்துக்காக நான் போட்ட மேக் – அப்தான் இதுவரையில் நான் என் சினிமா வாழ்க்கையில் போட்ட ஒட்டுமொத்த மேக் – அப்! அந்த கஷ்டங்கள், டிரெய்லரில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக மாறிடுச்சு.’ என்றவரிடம், அவரது ஃபிட்னஸ் பற்றி ஆளாளுக்கு துளைத்து எடுத்துவிட்டார்கள்.
அப்போது “அதிகாலை 4 மணிக்கு எழுந்திருப்பேன், தினமும் ஜிம்மில் ஒர்க் – அவுட் பண்ணுவேன், இது என்னுடைய சின்ன வயசு பழக்கம்.’ என்றெல்லாம் அக்ஷய் அடுக்கியபோது, ஆளாளுக்கு நெளிந்துவிட்டார்கள்.
காரணம், கோலிவுட்டின் பல இளம் ஹீரோக்களுக்கு இல்லாத பழக்கமெல்லாம் அண்ணன் அக்ஷயிடம் இருப்பதுதான். அத்தனையும் நல்ல பழக்கம்! என்பதுதான் ஹைலைட்டே.
Discussion about this post