காங்கிரஸ் உடன், ரஜினியின் கட்சி சேர்ந்தால் நன்றாக இருக்கும்! என்று ப.சிதம்பரம் பேட்டி தட்டியிருப்பதை திருநாவுக்கரசரும் ரசிக்கவில்லை, ஸ்டாலினும் ரசிக்கவில்லை. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் ப.சி.க்கோ அல்லது அவரது மகனுக்கோ சீட் ஒதுக்க நினைத்தால், பெரும் பஞ்சாயத்துகள் வெடிக்கலாம்! என்கிறார்கள்.
விஜயகாந்த் தொடர்ந்து ஆப்செண்ட் ஆகிக் கொண்டிருப்பதால், கட்சியின் பொருளாளர் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கும் பிரேமலதா, தனது அதிகாரத்தை நிலைநிறுத்தும் வகையில் பேசும் வார்த்தைகளை அக்கட்சியின் சீனியர் நிர்வாகிகள் ரசிக்கவில்லை! என தகவல்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, தேனி மாவட்ட கனிம வளங்களைக் கொள்ளையடிக்கிறார்! எனும் புகாரை தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி வெகுநாளாய் கிளப்பிக் கொண்டிருக்கிறது. போலீஸ் இது குறித்த புகாரைன் பதிவு செய்யாத நிலையில், கோர்ட்டுக்கு போய் வழக்கை பதிவு செய்யும் முடிவில் இருக்கிறது அந்த கட்சி.
சென்னை மெரீனாவில் அண்ணாவின் சமாதிக்கு அருகில் இருக்கும் கருணாநிதியின் சமாதியை காண்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இந்நிலையில், இங்கே தினமும் சுமார் ரெண்டாயிரம் பேருக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்க வேண்டும்! என்று ஆசைப்படுகிறாராம் ஸ்டாலின். கூடிய விரைவில் அதற்கான பணிகள் துவங்குமென்கிறார்கள்.
Discussion about this post