சில ஹீரோக்களுக்கு சில இயக்குநர்கள் ரொம்பவே ஸ்பெஷல். அப்படி மேட்சிங் மேட்சிங் செலிபிரெட்டிகள் தமிழ் சினிமாவில் நிறையவே உண்டு. அதில் முக்கியமானவர்கள் சூர்யா – ஹரி!
சிங்கம் (ஸ்), ஆறு, வேல்..என்று இந்த கூட்டணி ஹிட்டோ ஹிட்டடித்த படங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம்.
எப்போதெல்லாம் இருவருக்கும் தேக்கநிலை ஏற்பட்டு, உடனடி ஹிட் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் பரஸ்பரம் கைகொடுத்து காப்பாற்றிக் கொள்வார்கள் தங்களை.
அந்த வகையில் இப்போது இருவருக்குமே அதிரி புதிரி ஹிட் அவசியமாகி இருக்கிறது. சூர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கடும் சறுக்கல். ஹரிக்கோ சூர்யாவின் சிங்கம் 3, விக்ரமின் சாமி 2 இரண்டுமே செம்ம அடி.
விளைவு இரண்டு பேரும் மீண்டும் இணைந்து அதிரடியான ஹிட் ஒன்றுக்கு முடிவு செய்திருக்கிறார்கள். இதை சிலர் ‘சிங்கம் 4’ என்கின்றனர். ஆனால் ஹரி, சூர்யா கூட்டணியோ அதை கிட்டத்தட்ட மறுக்கிறது.
இது முழுக்க முழுக்க புதிய கதை, புதிய படம்! என்கிறார்கள்.
வீ ஆர் வெயிட்டிங்!
Discussion about this post