விஜய் சேதுபதியுடன், த்ரிஷா இணைந்த முதல் படமான ‘96’ தாறுமாறு ஹிட். இன்னமும் பல ஊர்களில் பல தியேட்டர்களில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது இந்நிலையில் தீபாவளியன்று இந்தப் படத்தை ஒரு பெரிய சேனல், சிறப்பு படமாக ஒளிபரப்ப உள்ளது. த்ரிஷா இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ‘இவ்வளவு சீக்கிரம் டி.வி.யில் போடுவது நியாயமில்லை’ என்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு பிரபல காமெடியனை பார்சல் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால் உடனே செய்ய வேண்டியது, அவரை உசுப்பேற்றி ஹீரோவாக நடிக்க வைப்பதுதான். இப்போது பீக்கில் இருக்கும் யோகிபாபுவும் இந்த சுழலில் சிக்கியுள்ளார். ’தர்ம பிரபு’ எனும் படத்தில் ‘எமன்’ பாத்திரத்தில் ஹீரோவாக பண்ணுகிறார் யோகி.
தொடர்ந்து மரண மாஸ் சறுக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் விக்ரம், தனது அடுத்த படமான ‘துருவ நட்சத்திரம்’ ஹிட்டடித்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார். விளைவு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலையில் இவரும் உதவிக்கு உட்கார, இயக்குநர் கெளதம் மேனனுக்கு செம்ம கடுப்பாகிறதாம்.
சிவகார்த்திகேயனை வைத்து ‘வேலைக்காரன்’ எடுத்த, ஜெயம் ராஜாவுக்கு அந்தப் படத்தின் வெற்றி மீது அநியாய நம்பிக்கை இருந்தது. ஆனால் படம் படுத்துவிட்டது. இந்நிலையில் சைலண்டாக ‘தனிஒருவன்’ படத்தின் செகண்ட் பார்ட்டை எழுதி முடித்துவிட்டார். இதிலும் ஜெயம் ரவிதான் ஹீரோ! ஆனால் அர்விந்த்சாமி கிடையாதாம். கேட்டால், ‘முதல் பார்ட்டிலேயே அவர் இறந்துவிட்டாரே!’ என்கிறார்கள். ஆனாலும், ரவியை விட அந்தப் படத்தில் அர்விந்துக்கு ஓவர் கிரேஸ் கிடைத்ததே பிரச்னை என்று தகவல்.!
Discussion about this post