மாற்றம்! முன்னேற்றம்! அன்புமணி!
– கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வின் இளையரணி தலைவரான அன்புமணியை முன்னிலைப்படுத்தி பாட்டாளி மக்கள் கட்சி செய்த பிரச்சாரம்தான் இது. பல லட்சங்களை செலவு செய்தும் கூட ஒரு எம்.எல்.ஏ.வை கூட வென்று தரவில்லை அந்த பிரச்சாரம்.
இந்நிலையில் இப்போது தாடியெல்லாம் வைத்து, தன் ஹேர் ஸ்டைலையும், லுக்கையும் மாற்றிக் கொண்டு பொதுவெளியில் வந்து நிற்கிறார் அன்புமணி ராமதாஸ். இந்த மாற்றம் அவரை முன்னேற்றுமா? என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக இருக்கிறது.
இது பற்றி பா.ம.க.வின் முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டால், “நிச்சயமாய் அவர் முன்னேறுவார், அதுவும் முதல்வர் பதவியை தொடுமளவுக்கு முன்னேறுவார். காரணம், அவர் இப்போது கையில் எடுத்துள்ள திட்டங்கள் அத்தனையும் அவ்வளவு முக்கியமானவை.
எல்லாமே விவசாயத்தை முன்னிலைப்படுத்தியவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டங்கள் இளைஞர்களிடம் அவரைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. கிராமப்புற மக்கள் அவரை திரும்பிப் பார்க்கின்றனர். விவசாயத்தை அதுவும் இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்தி அவர் இயங்குவது பெருவாரியான ஈர்ப்பை கிளப்பியிருக்கிறது. காடுவெட்டி குரு விஷயத்தில் எங்கள் கட்சிக்குள் பிரச்னை ஓடுகிறது! என்று சிலர் கிளப்பி இருப்பது பக்கா பொய் வேலை.
ஆக மொத்தத்தில் அன்புமணி ராமதாஸ் கூடிய விரைவில் முதல்வராவது உறுதி.” என்கிறார்கள்.
நம்பிக்கை! அதானே எல்லாம்?
Discussion about this post