நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையிலான பந்தம் அற்புதமானது. தன் பர்ஷனல் வாழ்வில் பல விஷயங்களை சிவாஜி சொன்னதால்தான் கமல் மாற்றிக் கொண்டார், திருத்திக் கொண்டார்… (கல்யாணம் உட்பட!), கமல் தன்னை சிவாஜியின் மகன்களில் ஒருவராகதான் உருவகப்படுத்திக் கொள்வார்.
இந்நிலையில் இப்போது சிவாஜியின் பேரனுக்கு கமல்ஹாசன் மாமனாராக ஆகும் கதை தெரியுமா உங்களுக்கு?…
பிக்பாச் சீசன் 1-ல் பாதியில் உள்ளே நுழைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் அதுவரையில் கிளாமர் கேர்ள் ஆக பார்க்கப்பட்ட சுஜா, பிக்பாஸின் மூலம் ‘குட் கேர்ள்’ எனும் பெயரை எடுத்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருக்கையில் ஒரு முறை கமல்ஹாசனிடம் ‘என்னோட அப்பா ஸ்தானத்தில் இருந்து என் மேரேஜை நீங்க பண்ணி வைக்கணும்!’ என்று கோரிக்கை விடுத்திருந்தார் .
இதற்கு கமலும் ஓ.கே சொல்லியிருந்தார்.இந்நிலையில் சிவாஜி கணேசன் மகன் வழி பேரனைத்தான் சுஜா திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கான அழைப்பிதழை சமீபத்தில் கமலிடம் கொடுத்த சுஜா, ‘கண்டிப்பா வந்து நடத்தி வையுங்கப்பா, என் கல்யாணத்தை!’ என்று அழைத்துள்ளார். கமலும் வருவதாக தலையசைத்துள்ளார்.
ஆக மணப்பெண்ணின் அப்பா ஸ்தானத்தில் கமல் நின்றால், அவர் சிவாஜியின் பேரனுக்கு மாமனார்தானே!
Discussion about this post