நஸ்ரியாவுக்கு மலையாளத்தில் மட்டுமில்லை கோலிவுட்டிலும் செம்ம கிரேஸ் உண்டு. சரசரவென பீக்கை தொட்டுக் கொண்டிருந்த நிலையில், சட்டென்று ஃபகத் பாசிலை கல்யாணம் கட்டிக்கினு செட்டிலாகிவிட்டார் பொண்ணு.
நஸ்ஸை இப்படி மிஸ் பண்ணிட்டோமே! என்று தென்னிந்திய சினிமா உலகம் செம்ம ஃபீலிங்கில் இருந்தது.இந்நிலையில், பிருத்விராஜின் தங்கையாக ஒரு சாஃப்ட் பேய் வேடத்தில் நடித்தார் நஸ்ரியா.அவரது ரீ எண்ட்ரியை மலையாள திரையுலகம் ஆராதித்தது.இந்நிலையில் கணவர் ஃபகத் பாசில் உடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் நஸ்! என்கிறார்கள். ‘ட்ரான்ஸ்’ எனும் படம்தான் அது.
கலக்கு கேர்ள் நீ!
Discussion about this post