* தளபதி நடிகரின் சர்கார் படத்துக்கு தியேட்டகள் ஒதுக்கப்படுவதில் கடைசி நேரத்தில் செம்ம பஞ்சாயத்துகள் தலையெடுத்ததாம். ஆளுங்கட்சியின் லீலைகள்தான் இவை என்று கர்ஜிக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.
* டோலிவுட்டை தெறிக்க விட்டு, பின் கோலிவுட்டிலும் குளறுபடிகள் செய்த நடிகை ஸ்ரீரெட்டிக்கு தமிழில் படமொன்று புக் ஆகிவிட்டது. புதிய படத்துக்காக புல்லட் ஓட்ட கற்றுக் கொள்கிறது பொண்ணு.
* விஜய்யை ஹீரோவாக வைத்து ‘திருப்பாச்சி, சிவகாசி’ என இரண்டு மெகா மசாலா படங்களை தந்த இயக்குநர் பேரரசு, அவருக்கே அவருக்காக இன்னொரு கதை ஒன்றை தயார் செய்துவிட்டு காத்திருக்கிறார். ஆனால் தளபதி சைடிலிருந்து எந்த சிக்னலும் இதுவரை இல்லை.
* சர்கார் கதை விவகாரத்தில் மிகவும் நேர்மையாக நடந்து கொண்ட வகையில் இயக்குநர் கே.பாக்யராஜை மீடியாக்களும், பத்திரிக்கைகளும் ‘நிஜ ஹீரோ’ என புகழ்வதில் விஜய்க்கு ஏக வருத்தமாம்.
* 2.0 படத்தின் வெற்றிக்கு ரஜினியின் ஸ்டைலும் அசத்தலான நடிப்பும் தான் பெரும் காரணமாக இருக்கும்! என்று புகழ்ந்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அடுத்து கமலை வைத்து இந்தியன் -2 வுக்கு தயாராகிவிட்டவர், அதன் பின் ரஜினி – கமல் இருவரையும் சேர்த்து வைத்து படமொன்றை இயக்கும் பிளானில் இருக்கிறாராம்.
Discussion about this post