விஜய் நடித்துள்ள சர்கார் படம் நாளை வெளியாக உள்ளது. ஆனால் மீண்டும் ஒரு பிரச்சனையாக இப்படம் வெளியாகிற நாளைக்கு மாலையிலேயே இப்படத்தின் HD பிரிண்ட்டை இணையத்தளத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்திருந்தது.
கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ள இவ்விஷயத்தால் தளபதி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்தநிலையில் இந்த மிரட்டலுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் கௌரவ செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் ராக்கஸின் இந்த மிரட்டலை முறியடிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post