ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘வாட்ச்மேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாட்ச்மேன்’. ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு, பெரும்பாலும் இரவில் நடைபெற்றுள்ளது.
‘வாட்ச்மேன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று (நவம்பர் 5) வெளியிடப்பட்டது. இதன் டீஸர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. மேலும், ‘காதலைத் தேடி நித்யா நந்தா’, ‘ஜெயில்’, ‘ரெட்டக் கொம்பு’ ஆகிய படங்களில் ஜீ.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்.
Discussion about this post