சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படத்தின் தலைப்பு பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
பவன் கல்யாண் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு ரிலீஸான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. சமந்தா மற்றும் பிரணிதா இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்தனர். நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சுந்தர். சி இந்தப் படத்தை இயக்க, சிம்பு ஹீரோவாக நடித்து வருகிறார். சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணிதா வேடத்தில் கேத்ரின் தெரேசா நடிக்கிறார்.
நதியா நடித்த ஹீரோவின் அத்தை வேடத்தில் குஷ்பூ நடிக்கும் இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். செப்டம்பர் 17-ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கிய இந்தப் படத்தில், யோகி பாபு, மஹத், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை (நவம்பர் 6) வெளியாகும் என லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்தது. இந்நிலையில், அந்தத் தலைப்பு என்ன என்பது பற்றிய தலைப்பு கிடைத்துள்ளது. ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் இது. இந்த வசனத்தை சிம்பு தான் பேசுவார். எனவே, அதிலிருந்து இந்தத் தலைப்பை எடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் தலைப்பு ‘வி’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என்று செய்திகள் வெளியான நிலையில், இந்தத் தலைப்பு அதை உறுதி செய்வதாக உள்ளது.
Discussion about this post