20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். இவர் 2,102 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உ.பி.யின் லக்னோவில் புதிதாக கட்டப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்தியா, ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தால் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இதன்மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி விராட் கோலியை முந்தினார். தற்போது 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், 20 ஓவர் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனைக்கும் ரோகித் சர்மா சொந்தக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post