நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் HD print இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் நேற்று பதிவிட்டது. இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. மேலும் உயர்நீதிமன்றமும் வெளியிட கூடாது என்று தடைவிதித்தது. இருப்பினும், நேற்று காலை தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தின் HD print இன்றே வெளியாகும் என்று மீண்டும் ட்விட்டரில் பதிவு செய்தார்கள். இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று மதியமே சர்கார் படம் இணைய தளத்தில் வெளியானது.
Discussion about this post