வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

“சர்கார்” அக்கு அக்காக பிரித்து மேய்ந்த விமர்சனம்…

தமிழ்நாட்டு அரசியலுக்கு முதல்வர் வேட்பாளர்களை அடுத்தடுத்து தமிழ் சினிமா உற்பத்தி செய்து அனுப்பிவருகிறது. இந்தப் பட்டியலில் அடுத்ததாக விஜய்யின் பெயரும் அடிபடும் நிலையில் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் டைட்டிலில் இருந்தே அரசியல் பேசுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

November 7, 2018
in திரையரங்கம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல்… கார்ப்பரேட்…கம்யூனிசம்… சர்கார்!
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவிலிருந்து ஓட்டு போடுவதற்காகச் சென்னை வருகிறார் சுந்தர் ராமசாமி (விஜய்). பிரபல நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அவரது ஓட்டு கள்ள ஓட்டாகப் போடப்பட்டுள்ளது தெரியவருகிறது. லட்சங்கள் செலவழித்து சட்டப் போராட்டம் நடத்தி தனது ஓட்டை மீட்கிறார். அவரது நடவடிக்கை மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஓட்டும் கள்ள ஓட்டாகப் போடப்பட்டதாகக் கிளம்ப, மூன்றாவது முறையாக மாசிலாமணி (பழ.கருப்பையா) முதல்வராக முடியாமல் போகிறது. அதற்குக் காரணமானவரைப் பழிவாங்க முயல, சுந்தரின் கவனமோ அரசியலில் திரும்புகிறது. பணத்துக்கு வாக்களிக்கும் கூட்டமாக மக்களை மாற்றிவைத்திருக்கும் அரசியல் தலைவர்களை எதிர்த்து மக்கள் செல்வாக்குடன் தேர்தலில் வெற்றி பெற முயல்கிறார் சுந்தர். அதில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன, அவரது முயற்சி பலனளித்ததா என்ற பாதையில் திரைக்கதை பயணிக்கிறது.

சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்களுக்குள் நேரடியாகப் பேசிக்கொள்ளும்போதும் அரசியல் பேச்சுகள் மக்கள் மத்தியில் முன்பைவிட காத்திரமாக உள்ளன. சமூக வலைதளங்களின் ஆதிக்கம், தமிழகத்தில் பிரதான இரு கட்சிகளின் தலைவர்கள் மறைவு, வெளிப்படையாக நடைபெறும் அரசியல் நாடகங்கள், அரசியல் தலைவர்களின் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். ஊடகங்கள் மறைத்தாலும் இணையம் வாயிலாக மக்கள் போராட்டங்கள் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. அரசியல்வாதிகள் தங்கள் நிலைப்பாட்டை முன் பின் மாற்றிச் சொல்வது இருபத்தி நான்கு மணி நேரமும் இணையத்தில் இருப்பவர்களால் உடனடியாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த மாற்றங்களைக் கடந்த இரு ஆண்டுகளில் வெளியான பல படங்களில் காண முடிகிறது. படங்கள் எதை மையமாகக் கொண்டு உருவாகினாலும் அரசியல் கூத்துகளைக் கலாய்க்கும் தொனியில் ஒரு வசனத்தையாவது வைத்துக் கைதட்டல் வாங்குகின்றன. இந்த நிலையில் அரசியல் பிரச்சினைகளையே மையமாகக்கொண்டு உருவாகும் படங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

விஜய் நடிக்கும் படங்கள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கின்ற வகையில் உருவாகும். காமெடி, ஆக்‌ஷன், பஞ்ச் வசனங்கள் கட்டாயம் இடம் பெறும். சர்கார் திரைப்படம் முழுக்க அரசியல் பிரச்சினைகளைப் பேசுகின்ற படமாக இருந்தாலும் இவற்றுக்கான இடமும் திரைக்கதையில் உள்ளது. அதிரடி திருப்பங்கள், சமகால அரசியல் பிரச்சினைகள் எனப் பார்வையாளர்கள் எளிதில் படத்தோடு ஒன்ற முடிகிறது. அடுத்தடுத்து வரும் திருப்பங்கள், கூர்மையான வசனங்கள் ஆகியவற்றுடன் படம் சுவாரஸ்யமாக நகருகிறது.

முழுக் கதையும் விஜய்யின் கதாபாத்திரத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை விஜய் வழக்கம் போல் அளித்துள்ளார். ஆனால் பிரச்சினைகளில் அவரது கதாபாத்திரம் எடுக்கும் முடிவுகள் வலுவாக உருப்பெறவில்லை. அசாத்தியமான ஆற்றல் கொண்ட பெரு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி என்பது நாயகன் விஜய்யின் கதாபாத்திரம். கார்ப்பரேட் கம்பெனிகளின் தந்திரங்கள் அறிந்த, தொழில்நுட்பத்தில் மிகவும் தேர்ச்சியடைந்த, பெரும் பணபலம் கொண்ட, சர்வதேச அளவில் முக்கியப் புள்ளிகளுடன் தொடர்புகள் உள்ள ஒரு நபராக அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைகளைப் புரிந்துகொள்ளலாம்.

அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் உள்ள, மூன்றாவது முறையாக முதல்வராகப் போகிற, பெரும் தொண்டர் படையைக் கொண்டுள்ள ஓர் அரசியல்வாதியை எதிர்க்கிறார். இருவரும் தங்களுக்குள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி பரஸ்பரம் மோதிக்கொள்வதுதான் திரைக்கதையின் சாராம்சம். போட்டி நிறுவனங்களை அந்தந்த நாட்டுக்கே சென்று அழித்தொழிப்பதில் வல்லவர் என்று நாயகன் விஜய் பற்றிய தகவல் பல முறை சொல்லப்படுகிறது. ஆனால், அவரது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யும்படியாக காட்சிகள் அமைக்கப்படவில்லை. ட்விட்டர் அக்கவுன்ட்டை ஹேக் செய்து பதிவிடுவது தவிர அந்தக் கதாபாத்திரம் குறித்து கட்டமைத்த பிம்பங்களைக் காட்சிகளின் மூலம் விளக்கவில்லை.

நூற்றுக்கணக்கானோர் இருந்தாலும் தனியாளாகப் போய் எதிரிகளை அடித்து நொறுக்குவது போன்ற வழக்கமான கமர்ஷியல் கதாநாயகனாகவே விஜய் வருகிறாரே தவிர, சுந்தர் ராமசாமி என்ற கார்ப்பரேட் மூளை கொண்ட கதாபாத்திரத்தின் தன்மைகள் எந்த இடத்திலும் வெளிப்படவில்லை. க்ளைமாக்ஸில் ஏற்படும் மிகப்பெரிய திருப்பத்திலும் நாயகனின் பங்கு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. புதிதாக ஒரு கதாபாத்திரம் தோன்றியும், எதிர்த் தரப்பிலிருந்து மனம் மாறி ஒருவர் வந்தும்தான் நாயகனை வெற்றிபெற வைக்க வேண்டியுள்ளது. அந்த மனமாற்றத்துக்குப் பின்னரும் கேள்விகள் உள்ளன.

தமிழ் சினிமாவில் மட்டுமே நாயகன் மக்கள் கூட்டத்தை பார்த்து இரண்டு வசனங்கள் பேசியவுடன் மனம் மாறி அவர் பின்னால் செல்வது நடைபெறுகிறது. பதினைந்து நாட்களில் பொதுத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில் சுவருக்கு வெள்ளை அடித்துக்கொண்டிருப்பது, ஃபேஸ்புக் லைவ்வில் பேட்டி கொடுத்தே அத்தனை தொகுதிகளில் ஜெயிப்பது என பஞ்ச் வசனம் பேசவும் பாடலுக்கான மாண்டேஜ் அழகாக இருக்கவே இயக்குநர் கவனமுடன் செயல்பட்டுள்ளார். அதன் நடைமுறை சாத்தியம் குறித்து அவர் கவலைப்படவே இல்லை.

பிரச்சினைகளை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக அடுக்கும் இயக்குநர், அதற்கான தீர்வை முன்வைப்பதிலும் அதன் சாத்தியத்தைச் சொல்வதிலும் தவறுகிறார். இதனால், முதல் பாதியில் விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் இரண்டாம் பாதியில் வேகம் குறைகின்றன. பல்வேறு அரசியல் தலைவர்கள், சமீபகால அரசியல் நிகழ்வுகள் ஆகியவை திரைக்கதையில் கதாபாத்திரங்களாகவும், காட்சிகளாகவும் உருவாகியுள்ளன.

கதாநாயகி கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காக கீர்த்தி சுரேஷ் விஜய் உடனே வருகிறார். மற்றபடி அவரது கதாபாத்திரம் எந்த இடத்திலும் திரைக்கதையில் முக்கியப் பங்களிப்பை அளிக்கவில்லை. மாகா நடிகையாகவே இருந்தாலும் இன்றைய வணிகப் படங்களில் நாயகியின் நிலை இதுதான். யோகி பாபு கதாபாத்திரமும் அத்தகையதே. குறைவான காட்சிகளில் இடம்பெற்றாலும் வரலட்சுமியின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் குறிப்பிடும்படியாக உள்ளன.

இயக்குநர் காட்சிகளில் ஏற்படுத்த நினைத்த உணர்வுகளை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை மூலம் உருவாக்குகிறார். தனியாகக் கேட்பதைவிட படத்தில் இடம்பெறும்போது பாடல்கள் ரசிக்கும்படியாகவே உள்ளன. கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக்குகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கச்சிதமாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாகப் படம் சிறந்து விளங்குவதால் பார்வையாளர்களை ஒன்றவைக்கிறது.

சமகால அரசியல் பிரச்சினைகளை தனது திரைக்கதையில் இணைக்கும் பணியை ஏ.ஆர்.முருகதாஸ் தனது பல படங்களில் செய்துள்ளார். பிற வகைமைகளில் படங்களை உருவாக்கினாலும் அரசியல் சார்ந்த வசனங்களை வைக்கத் தவறுவதில்லை. ஆனால், அவரது படங்களில் பிரச்சினைகளின் மையத்துக்குச் செல்லாமல் வெறுமனே சொல்வதோடு நிறுத்திக்கொள்வார். அல்லது சாத்தியமில்லாத தீர்வை தனது நாயகன் கதாபாத்திரம் மூலம் வழங்குவார். நிஜத்தில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு வழங்கிவிட்டதாக சராசரி பார்வையாளன் புளகாங்கிதம் அடைவான். சர்கார் படத்திலும் அதுதான் நடந்துள்ளது. ரொமான்ஸ், ஆக்‌ஷன், காமெடி என பார்வையாளர்களை அந்த நேரம் மகிழ்விக்கப் பயன்படுத்தும் அம்சங்களைப் போலவே சமூக பிரச்சினைகளையும் தொட்டுக்கொள்வார். உண்மையில் இந்தப் பிரச்சினைகளைப் பேசாமல் இருப்பதைவிட மோசமான, நடைமுறை சாத்தியமற்ற, நாயகனைத் தூக்கிப்பிடிக்க உதவும் தீர்வுகளே ஆபத்தானவை. அப்படியான ஆபத்தை மேம்போக்கான அரசியல் பேசும் படங்கள் கொண்டுள்ளன. சர்காரும் அந்த வரிசையில் சேர்ந்துகொண்டுள்ளது.

ShareTweetSendPinShare

Related Posts

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!
திரையரங்கம்

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !
திரையரங்கம்

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

1959ல் சினிமா உலகைவிட்டே ஓடிப்போய்  மதுவே கதி என்று  வாழ்ந்த சந்திரபாபு!!
திரையரங்கம்

1959ல் சினிமா உலகைவிட்டே ஓடிப்போய் மதுவே கதி என்று வாழ்ந்த சந்திரபாபு!!

இணையத்தை ரவுண்டு கட்டும்  கீர்த்தி பாண்டியனின் சூடான நீச்சலுடை போட்டோக்கள்…
திரையரங்கம்

இணையத்தை ரவுண்டு கட்டும் கீர்த்தி பாண்டியனின் சூடான நீச்சலுடை போட்டோக்கள்…

சென்னையில் பிரபல தியேட்டரில் படம் பார்த்த தோனி… என்ன படம் பார்த்தார் தெரியுமா?
திரையரங்கம்

சென்னையில் பிரபல தியேட்டரில் படம் பார்த்த தோனி… என்ன படம் பார்த்தார் தெரியுமா?

அஜித் ஒரு அழுகு சுந்தரன், கெத்தா இருப்பார்னு நெனச்சேன்… ஆனால்!! அம்மா நடிகை சர்ப்ரைஸ் பேட்டி
திரையரங்கம்

அஜித் ஒரு அழுகு சுந்தரன், கெத்தா இருப்பார்னு நெனச்சேன்… ஆனால்!! அம்மா நடிகை சர்ப்ரைஸ் பேட்டி

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி