காற்றின் மொழி திரைப்படத்தில் ஜோதிகா, விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் ராதாமோகன் இயக்கத்தில் இயக்கப்பட்டுள்ளாது. இத்திரைப்படத்தை பற்றி விதார்த் கூறியது என்னவென்றால், ராதாமோகன் சார் படத்தில் நடிக்க வேண்டுமென்று எனக்கு நீண்ட நாள் ஆசை இருந்தது. ஒரு நாள் திடீரென தயரிப்பாளர் தனஞ்செயன் போன் செய்து, இப்படி ஒரு படம் பண்ணுகிறோம். அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது நடிக்கிறீர்களா எனக் கேட்டார். ராதாமோகன் படம், ஜோதிகா நடிக்கிறாங்க எனும்போது எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்? உடனே ஒகே என சொல்லிவிட்டேன்.
ஆனால், இயக்குனர் ராதாமோகன் முதலில் நீளமான காட்சியை படமாக்க வேண்டும் என்றார். நான் தயக்கத்தோடு கொஞ்சம் சின்ன சீன் எடுக்கலாமே அப்போதுதான் உங்களை நானும் என்னை நீங்களும் புரிந்துகொள்ள முடியும் என்றேன். உடனே சரி என்று சொல்லிவிட்டார். அதுமட்டுமில்லாமல் ஜோதிகா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ண்டிப்பை கண்டு நான் மிரண்டு விட்டேன். பயமும் அதிகரித்தது.
நடிப்பில் சிறந்தவரான ஜோதிகா அவர்களின் நடிப்பை கண்டு இயக்குனர் அருமை என கை அசைத்து கொண்டே இருந்தார். மிகச் சாதாரணமாக எனதருகில் உட்கார்ந்திருந்த எம்.எஸ்.பாஸ்கர் சார், ஷாட் சொன்னதும் சட்டென்ன அழுது நடித்தது மிக ஆச்சர்யாமாக இருந்தது. நான் இப்படத்தை நன்றாக நடித்து முடிப்பதற்கு ஒட்டுமொத்த படக்குழுவும் காரணம். மேலும் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு ஜோதிகா மேடம்தான் காரணம்.
அவ்வளவு பெரிய நடிகையான ஜோதிகா மேடம் என்னுடன் பேசுவாரா என்று தயக்கம் நிறைய இருந்தது. ஆனால் ஜோதிகா மேடம் என்னை ஜோ என்று கூப்பிடுங்க என்று சகஜமாக பேசினார்.
Discussion about this post