சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது புகைபிடிக்கும் காட்சி உள்ளது என தொடங்கிய சர்ச்சை, கதை திருட்டு, பாக்யராஜ் ராஜினாமா என நீண்டது. ஒரு வழியாக படம் திட்டமிடப்பட்டபடி நேற்று வெளியானது. ஆனால் படம் வெளியானாலும் சர்ச்சைகள் மட்டும் குறைந்தபாடில்லை. தற்போது அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு காலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “சர்கார் படத்தில் சில காட்சிகள் தொடர்பாக அரசுக்குத் தகவல்கள் வந்துள்ளன. அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் காட்சிகளை அவர்களாகவே நீக்க வேண்டும். இது வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு நல்லது அல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும்” என்றார்.
Discussion about this post