சர்கார் படம் திட்டமிடப்பட்டபடி நேற்று வெளியானது. ஆனால் படம் வெளியானாலும் சர்ச்சைகள் மட்டும் குறைந்தபாடில்லை. தற்போது அதிமுக அமைச்சர் கேபி அன்பழகன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
படம் இலவசத் திட்டங்கள் வழங்குவதைக் கொச்சைப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “சர்கார் திரைப்படத்தில் இலவசங்கள் வேண்டாம் என்று கூறப்படுவதை மக்களே ஏற்க மாட்டார்கள்.
மக்களின் மனநிலைக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் ஒருவரையும் மக்கள் மனதில் கொள்ள மாட்டார்கள். தமிழக மக்களின் மனநிலை தற்போது ஆளும் அதிமுக அரசுக்கு சாதகமாகத்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.
Discussion about this post